✨ தங்க விதை அறுவடை திட்ட விதிமுறைகள் ✨
- இத்திட்டத்தின் கீழ் ஒரு சிறிய தொகையை மாதந்தோறும் சேர்ந்து தங்க நகைகள் பெறலாம். நீங்கள் மாதாந்திர தவணையாக ₹1000 க்கும் மேல் ஒரு தொகையை தேர்வு செய்யலாம்.
- மாதாந்திர தவணை தொகை அன்றைய மார்க்கெட் விலைக்கு ஏற்ப தங்க எடையாக வரவு வைக்கப்படும்.
- பணம் செலுத்தும் நேரத்தில் தங்கத்தின் அன்றைய மார்க்கெட் விலையைப் பொறுத்து ஒவ்வொரு தவணைக்கும் தங்கத்தின் எடை மாறுபடலாம்.
- ஒவ்வொரு தவணைக்கும் இடையே 30 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும்.
- இத்திட்டம் இணைந்த தேதியிலிருந்து 11 மாத தவணை முடிந்த பிறகுதான் முதிர்ச்சி அடையும்.
- 11வது தவணையை முடித்த 30 நாட்களுக்கு பிறகுதான் தங்க நகைகள் வாங்க முடியும்.
- சேகரித்த எடைக்கு மேல் வாங்கும் நகைகளுக்கு சேதாரம் மற்றும் GST போன்ற கட்டணங்கள் செலுத்த வேண்டும்.
- முதல் கட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட தவணை தொகை பின்னர் மாற்ற முடியாது.
- முதிர்வு தேதிக்கு முன் விலகினால் திட்ட பலன்கள் வழங்கப்படாது.
- அரசாங்க விதிமுறைகளின்படி GST 3% செலுத்த வேண்டும்.
- மொத்த தவணை ரூ.2,00,000 மேல் இருந்தால் PAN சமர்ப்பிக்க வேண்டும்.
- பதிவு செய்த நபரே திட்டத்தை முடிக்க வேண்டும். இல்லையெனில் NOMINEE சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
- சேகரித்த தொகையை பணமாக பெற முடியாது. தங்க நகைகளாக மட்டுமே பெற முடியும்.
- KYC மூலம் NOMINEE நியமிக்கலாம்.
- முதிர்வு நேரத்தில் OTP மூலம் மொபைல் எண் மற்றும் கையொப்பம் சரிபார்க்கப்படும்.